சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய், காஜல்அகர்வால், அக்சராஹாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படம் மூலம் முதன்முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ள காஜல்அகர்வால், ஆரம்பத்தில் இருந்தே படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது டுவிட்டரில் ஷேர் பண்ணி வருகிறார்.
தற்போது பல்கேரியாவில் நிகழும் கடும் பனிப்பொழிவு குறித்து அங்குள்ள அனைத்து நீர்ப்பரப்புகளும் ஐஸ் கட்டிகளாக உறைந்து போயிருப்பதை நேற்று தனது டுவிட்டரில் போட்டோவுடன் வெளியிட்டுள்ளார்.
இந்த தட்பவெட்ப நிலை காரணமாக, இறுதிகட்ட படப்பிடிப்பை அங்கு தொடர முடியாமல் படக்குழு விரைவில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: