Propellerads
Navigation

ஆபாச காட்சிகள் இருக்காது

“எனது திரைப்படங்களில் இதுவரை கதாநாயகிகளின் முகம் சுழிக்கும் ஆபாச காட்சிகள் இருந்தது இல்லை. இனிமேலும் இருக்காது” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சுராஜ் இயக்கத்தில், விஷால்-தமன்னா ஜோடியாக நடித்துள்ள “கத்தி சண்டை” திரைப்படம் நாளைய தினம் திரைக்கு வரவுள்ள நிலையில், ஊடகங்களுக்க அளித்த பேட்டியில் விஷால் இதனைக் கூறியுள்ளார்.

“நான் நடித்துள்ள கத்தி சண்டை திரைப்படம் தீபாவளிக்கு வர வேண்டியது. கார்த்தியின் காஷ்மோரா வந்ததால் தள்ளிவைக்கப்பட்டு இப்போது திரைக்கு வருகிறது. தமிழில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்படுகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் வெளியாகிறது.

வடிவேலுவின் மறுபிரவேசத்தை எல்லோருமே ஆர்வமாக எதிர்பார்த்தனர். அது என் திரைப்படம் மூலம் நடந்து இருப்பது பெருமை அளிக்கிறது.

நகைச்சுவைக்கு திரைப்படத்தில் பஞ்சமே இருக்காது. முதல்பாதியில் சூரியும் இரண்டாம் பாதியில் வடிவேலுவும் வருகிறார்கள். தமன்னா அழகான நடிகை. எங்களுடைய ஜோடி இந்த திரைப்படத்தில் புதுசாக இருக்கும். தமன்னா கவர்ச்சியாக வருகிறாரா? என்று கேட்கிறார்கள். அவர் கவர்ச்சியாகவோ நீச்சல் உடையிலோ இதில் நடிக்கவில்லை. பாடல் காட்சியில் எவ்வளவு கவர்ச்சி தேவையோ அந்த அளவுக்கு நடித்து இருக்கிறார்” என்றார்.

Share
Banner

Post A Comment: