Propellerads
Navigation

பிளாஷ்பேக்: 3 ஆயிரம் பாடல்களை எழுதியவரின் எளிய வாழ்க்கை


திரைப்படத்துக்கும், பக்தி ஆல்பத்துக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் பூவை செங்குட்டுவன். திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..., ;ஏடுதந்தானடி தில்லையிலே..., நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை..., தாயில் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..., ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே... இப்படியான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை எழுதியவர்

இளையராஜா சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது அவரை கம்பெனி கம்பெனியாக அழைத்துச் சென்று வாய்ப்பு கேட்டவர். ஆரம்பத்தில் பக்தி பாடல்கள எழுதிக் கொண்டிருந்தவரை எம்.ஜி.ஆர் அழைத்து சினிமா பாடல் எழுத வைத்தார். புதிய பூமி படத்தில் இடம் பெற்ற நான் உங்கள் வீட்டு பிள்ளை ... என்பதுதான் முதல்பாட்டு. ஜெயலலிதா பாடிய பக்தி பாடல்களை இவர்தான் எழுதினார். கருணாநிதி மகன் மு.க.முத்துவுக்கு சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க... என்ற பாடலையும் எழுதினார்.

திருக்குறளில் உள்ள குறள்களில் அகராதிக்கு ஒன்றை தேர்வு செய்து 133 குறள்களை 18 பாடகர்களை கொண்டு பாடவைத்து 7 இசை அமைப்பாளர்களை இசை அமைக்க வைத்து தனி ஆல்பமாக வெளியிட்டிருக்கிறார்.இத்தனை சாதனைகளையும் செய்தவர் பூவை செங்குட்டுவன்.

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று முதல்வர்களையும் அவருக்குத் தெரியும். ஆனால் யாரிடமும் போய் எந்த உதவியும் கேட்டதில்லை. 80 வயதை கடந்தும் பூவை செங்குட்டுவன் இப்போதும் எளிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தேனாம்பேட்டை சிக்னல் பக்கம் போனால் கோவிலில் மார்கெட்டில், எல்டாம்ஸ் ரோட்டில் சர்வசாதாரணமாக அவரை பார்க்கலாம்.
Share
Banner

Post A Comment: