Propellerads
Navigation

'பைரவா' படத்தின் இன்னொரு பாடல் வரிகள் இதோ


இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படத்தின் 'பட்டையக் கெளப்பு, குட்டையக் குழப்பு' பாடல் வரிகளை சமீபத்தில் கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது இன்னொரு மெலடி பாடலின் வரிகள் தற்போது வெளிவந்துள்ளது. அழகிய காதல் மெலடி பாடலான இந்த பாடலையும் வைரமுத்து அவர்களே எழுதியுள்ளார். இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது:

ஒரு திருமண மண்டபத்தில் முதல் முதலாய் கீர்த்தி சுரேஷைப் பார்க்கிறார் நாயகன் விஜய். அவர் ஊர் தெரியாது; பேர் தெரியாது. ஆனால் அந்த அழகில் மனம் சொக்கிப் போகிறது. பசுவின் பின்னால் போகும் கன்றுபோல் கீர்த்தி சுரேஷின் பின்னால் விஜய் அலைந்து அலைந்து பாடும் பாடல் இது. கவிதையின் சாயல் கொண்ட இந்தப் பாடலைக் கவிதைபோல் படமாக்க வேண்டும் என்று இயக்குநர் பரதனைக் கேட்டுக்கொண்டேன். பாடல் படமாக்கப்பட்டதும் என் வீட்டுக்கே வந்து போட்டுக்காட்டினார் இயக்குநர் பரதன். இது ‘கேமராவில் எழுதிய கவிதை’ என்று அவரைப் பாராட்டினேன். இசை வரும் முன்னே; தமிழ் வரும் பின்னே. இதோ லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அந்த வரிகளை வாசிக்க வழங்குகிறேன். இசையோடு கேட்க இன்னும் சில வாரங்கள் காத்திருங்கள்...”
Share
Banner

Post A Comment: