Propellerads
Navigation

இந்த உலகின் அதிர்ஷ்டக்கார தந்தை நான் தான். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் வாழ்ந்த கவுதமி, நேற்று பிரிவதாக வெளியான அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த பிரிவு குறித்து கமல் கூறியதாவது:

கவுதமியின் வசதியான, ஆறுதலான முடிவு எனக்கும் விருப்பமே. எனது தனிப்பட்ட உணர்வுகள் இதில் முக்கியம் இல்லை. இந்த முடிவால் கவுதமிக்கும் சுப்புவுக்கும் எந்த அளவுக்கு மகிழ்ச்சி என்பதே முக்கியமானது. அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு என்று கூறிக்கொள்வதுடன் அவர்களுடைய முக்கிய தேவைகளுக்கு என்றும் நான் இருப்பேன்.

ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன், சுப்புலட்சுமி ஆகிய மூன்று ஆசிர்வதிக்கப்பட்ட மகள் எனக்கு இருப்பதால் இந்த உலகின் மிக அதிர்ஷ்டக்கார தந்தை நான் தான்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: