Propellerads
Navigation

இயக்குனர் ஆகிறார் சூப்பர் ஸ்டார் நடிகரின் தங்கை

தெலுங்கு திரையுலகின் முன்னாள் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மகன் மகேஷ்பாபு தற்போது சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நிலையில் இந்த குடும்பத்தில் இருந்து இன்னும் ஒருவர் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். அவர்தான் கிருஷ்ணாவின் மகளும், மகேஷ்பாபுவின் தங்கையுமான மஞ்சுளா.

இவர் ஏற்கனவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான இந்திரா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் மகேஷ்பாபு நடித்த படம் உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது மஞ்சுளா இயக்குனராகவுள்ளார்.

இவரது முதல் படத்தில் சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மஞ்சுளா தான் தயாரித்த படங்களில் சிறுவேடங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவரது நீண்டநாள் கனவான இயக்குனர் துறையை கையில் எடுத்துள்ளார். இவரது முதல் படத்தில் அண்ணன் மகேஷ்பாபு சிறப்பு தோற்றத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Share
Banner

Post A Comment: