Propellerads
Navigation

ராஜ்குமார் ராவ்வுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்


தமிழ், தெலுங்கு மொழிகளை தாண்டியும் பாலிவுட்டிலும் பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது தமிழில் எஸ் 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர், அடுத்தப்படியாக பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ரொமான்ட்டிக், காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்க உள்ளார். அஜய் கே பன்னாலல் இயக்குகிறார். அமுல் விகாஸ் மோகன், டோனி டி-சோசா மற்றும் நிதின் தயாரிக்க உள்ளார்கள். படத்திற்கு பேகன் ஹாகி தெறி என்று பெயரிட்டுள்ளார்கள், டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
Share
Banner

Post A Comment: