பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் கூடிய, ஆபாச உடை அணிந்து வந்த, ஹிந்தி பட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்துக்கு எதிராக, ராஜஸ்தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்டில், அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில், ஹிந்தி திரைப்பட கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் பங்கேற்றார். விழாவில், பிரதமர் மோடி படத்துடன் கூடிய, ஆபாச உடையை அணிந்து வந்தார்; இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, ராக்கி சாவந்துக்கு எதிராக, உ.பி.,யில் உள்ள, மீரட் கோர்ட்டில், ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், ராக்கி சாவந்துக்கு எதிராக, ராஜஸ்தானில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், ராக்கி சாவந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Post A Comment: