பாரத பிரதமர் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் கருப்பு பண முதலைகள் முதல் சாமானிய பொதுஜனம் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோலிவுட் திரையுலகமும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.
லட்சக்கணக்கில் கையில் பணம் இருந்தும் அத்தியாவசிய தேவைக்கு கூட செலவு செய்ய முடியாமல் மக்கள் திணறுகின்றனர். இதனால் திரையரங்குகளில் கூட்டம் பெருமளவு குறைந்துவிட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுக்கள் புக் செய்வதால் பிரச்சனையின் தீவிரம் தெரியவில்லை. ஆனால் சிறுநகரங்களில் உள்ள திரையரங்குகளில் பணம் கொடுத்தே டிக்கெட்டுக்கள் வாங்க வேண்டிய நிலை இருப்பதால் திரையரங்குகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதேபோல் கோலிவுட்டில் உள்ள 90% தயாரிப்பாளர்கள் பைனான்சியர்களை நம்பியே திரைப்படம் தயாரிக்கின்றனர். ஆனால் தற்போது பைனான்சியர்கள் அனைவரிடமும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மட்டுமே இருப்பதால் கடைசி நேர செட்டில்மெண்டுக்கள் முடியாத காரணத்தால் படங்களின் ரிலீஸ் தள்ளி போகின்றன.
விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேத் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் விஷாலின் 'கத்திச்சண்டை' திரைப்படமும் ரிலீஸ் தேதி தள்ளிபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் நோட்டுகள் பிரச்சனை இயல்பு நிலைக்கு வர இன்னும் ஒரு மாதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதுவரை கோலிவுட் திரையுலகம் மந்தமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

Post A Comment: