பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'எஸ் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தென்னிந்தியாவில் முதல்முறையாக ஒரு நடிகரின் படத்தை அந்த நடிகரின் ரசிகர் மன்றமே ரிலீஸ் செய்கிறது. ஆம் கேரளாவில் உள்ள சூர்யாவின் ரசிகர் மன்றமான 'சிங்கம் குரூப் திருச்சூர்' என்ற மன்றத்தினர் இந்த படத்தை சொப்னம் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கேரள மாநிலம் முழுவதும் ரிலீஸ் செய்கின்றனர். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கும் 'எஸ் 3' படக்குழுவினர்களுக்கும் கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Post A Comment: