Propellerads
Navigation

'தெறி' சாதனையை முறியடித்த 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முற்றிலும் முடிவடையவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளி விருந்தாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் வெளியாகி 185 மணி நேரத்தில் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் வெளியான விஜய்யின் 'தெறி' படத்தின் டீசர் 197 மணி நேரத்தில்தான் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றதால் 'தெறி'யின் சாதனையை 'பைரவா' முறியடித்துவிட்டதாக கருதப்படுகிறது.

இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படம் இதே 7 மில்லியன் பார்வையாளர்களை வெறும் 40 மணி நேரத்தில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: