Propellerads
Navigation

முத்தக்காட்சிகளில் நடித்து அலுத்து விட்டது: ரன்வீர் சிங்

டைரக்டர் ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள பிபிக்ரி படம் டிசம்பர் 9 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை புரோமோட் செய்யும் வேலைகளில் துவக்கி உள்ள ரன்வீர் சிங்கிடம், இப்படத்தில் முத்தக்காட்சிகளில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரன்வீர், முத்தக்காட்சிகளில் நடித்து எனக்கு அழுத்து விட்டது. முத்தம் கொடுத்த உணர்வில் இருந்து மீண்டு வர நினைக்கிறேன். பிபிக்ரி படத்தில் எத்தனை முத்தக்காட்சிகளில் நடித்தேன் என்றே சொல்ல முடியாது. படத்தில் நடித்து முடித்த பிறகு எத்தனை முத்தக்காட்சிகள் இருந்தது என நானும் வாணி கபூரும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தோம். முதலில் அவர் ஒரு சீனில் முத்தம் கொடுக்க வேண்டும். பிறகு அடுத்த சீனில் நான் முத்தம் கொடுக்க வேண்டும்.
முதலில் மேல் உதட்டில், பிறகு கீழ் உதட்டில், மீண்டும் முதலில் இருந்து என மாறி மாறி கொடுக்க வேண்டும். எந்த பகுதியில் முத்தக்காட்சி வைக்க வேண்டும் என நினைக்கிறாரோ அங்கு எல்லாம் முத்தக்காட்சியை வைத்து விட்டார் ஆதித்யா சோப்ரா. எந்த கோணத்தில் எல்லாம் முத்தம் கொடுக்க முடியுமோ, அத்தனையிலும் எங்களை முத்தம் கொடுக்க வைத்து விட்டார் என்றார்.
Share
Banner

Post A Comment: