Propellerads
Navigation

தனுஷின் மாஸ் அறிவிப்பால் கதிகலங்கிய கோலிவுட்

 
தனுஷ் நடித்த 'கொடி' கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா', வெற்றி மாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கும் 'பவர்பாண்டி' என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் செளந்தர்யா ரஜினியின் 'என்மேல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் விரைவில் மாஸ் அறிவிப்பு ஒன்றை அறிவிக்கவுள்ளதாகவும், அது என்ன என்பதை ஊகியுங்கள்' என்றும் பதிவு செய்துள்ளார்.

ரஜினி படத்தின் அறிவிப்பு அல்லது கார்த்திக் சுப்புராஜ் படத்தின் அறிவிப்பு இவை இரண்டில் ஒன்றுதான் அந்த மாஸ் அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: