Propellerads

About

Navigation
Recent News

எனக்கு கேப்பும் இல்லை ஆப்பும் இல்லை : வடிவேலு

காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. இவருடைய காமெடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கத்தி சண்டை’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார்.விஷால் கதாநாயகனாக நடித்துள்ள ‘கத்தி சண்டை’ படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வடிவேலு டாக்டராக நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், வடிவேலு, இசையமைப்பாளர் ஆதி, இயக்குனர் சுராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் நடிகர் வடிவேலு பேசும்போது, ''நான் சிறிது காலமாக படத்தில் நடிக்கவில்லை என்பதால் பெரிய கேப் ஆகிவிட்டது என்று பலரும் கூறுகிறார்கள். எனக்கு கேப்பும் இல்லை, ஆப்பும் இல்லை. நான் எப்போதும் டாப்புதான். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று கதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

சுராஜ் என்னிடம் சொன்ன கதை மிகவும் பிடித்தது. மேலும் விஷால் நடிப்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். நானும் விஷாலும் இதற்கு முன் ‘திமிரு’ என்னும் படத்தில் நடித்தோம் இந்த படம் சூப்பர் ஹிட்டானது.இதனை தொடர்ந்து ‘நடிகர் சங்கத்தை காணோம்’ என்ற படத்தில் நடித்தோம். அதாவது நடிகர் சங்க தேர்தல். இதுவும் எங்களுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது ‘கத்தி சண்டை’ படத்தில் நடித்திருக்கிறோம். இது சூப்பர் டூப்பர் ஹிட்டாகும்’ என்றார்.

விஷால் பேசும்போது, ‘சுராஜ் என்னிடம் கதை சொன்ன விதம் வடிவேலு சொல்வது போல் இருந்தது. இந்த படத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்குகள் என்று சொன்னேன். கண்டிப்பாக வடிவேலுவை நடிக்க வைக்க விரும்பினேன் அது நடந்து விட்டது மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் ஏற்கனவே ‘திமிரு’, நடிகர் சங்க தேர்தல் ஆகிய இரண்டு இடத்தில் இணைந்திருக்கிறோம். இதில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அதுபோல் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் இந்த ‘கத்தி சண்டை’ படமும் சிறந்த வெற்றியை பெறும்’ என்றார்.
Share
Banner

Post A Comment: