Propellerads
Navigation

கமல்-கவுதமி பிரிவு குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பின் விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசனை கனத்த மனதுடன் பிரிவதாக நேற்று நடிகை கவுதமி அறிவித்தவுடன் இந்த பிரிவுக்கான காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது.

அவற்றுள் ஒன்று கவுதமிக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் பிரச்சனை என்பதும் ஒன்று. மேலும் கவுதமியின் முடிவு குறித்து ஸ்ருதிஹாசன் மறைமுகமாக கருத்து தெரிவித்ததாகவும் வதந்தி பரவியது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஸ்ருதிஹாசன் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவர்கள் எடுக்கும் முடிவுகள் குறித்தும் கருத்து எதுவும் கூறவில்லை' என்று கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: