Propellerads
Navigation

நடிப்பை கற்று தர முடியாது : சாயிஷா சாய்கல்

சிவாய் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நடிகை சாயிஷா சாய்கல். சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிப்பு குறித்து பேசிய அவர், நடிப்பு என்பது கற்று கொடுத்து வருவதில்லை என நான் நினைக்கிறேன். 

நீங்கள் அந்த கதாபாத்திரத்தை, சூழலை உணர்ந்தால் இயற்கையாகவே உங்களிடம் அந்த உணர்வு வெளிப்படும். அதை கேமிரா முன்னால் எப்படி கொண்டு வர வேண்டும் என்பதற்கு தான் பயிற்சி எடுக்க வேண்டும். 

சிவாய் படத்திற்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்த போது எனக்கு 16 வயது. அப்படத்தில் ஒப்பந்தம் ஆன போது தான் 17 வது பிறந்தநாளை கொண்டாடினேன். இப்படத்தை எனது பிறந்தநாள் பரிசாக நினைக்கிறேன் என்றார்.
Share
Banner

Post A Comment: