பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் திரும்ப பெறுவதாக அறிவித்ததில் இருந்து பல விநோதமான சம்பவங்களும் சோக சம்பவங்களும் நடந்து வருகின்றனர். இடைவிடாத பணியின் காரணத்தால் வங்கி கேஷியர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததை நேற்று பார்த்தோம்.
இந்நிலையில் ரூ.4000 மதிப்பு கொண்ட ரூ.500 நோட்டுக்களை ரூ.100ஆக மாற்ற முடியாத டெல்லியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த ரிஜ்வானா என்ற 22 வயது பெண் கடந்த இரண்டு நாட்களாக தன்னிடம் இருந்த ரூ.4000 மதிப்பு கொண்ட ரூ.500 நோட்டுக்களை மாற்ற வங்கியில் வரிசையில் நின்றுள்ளார். ஆனால் இரண்டு நாட்களிலும் வங்கியில் மணிக்கணக்கில் காத்திருந்தும் போதிய இருப்பு இல்லாத காரணத்தால் அவருக்கு ரூ.100 நோட்டு கிடைக்கவில்லை
இதனால் அவர் வீட்டில் மன அழுத்தத்துடன் இருந்ததாகவும், இதனால் நேற்று திடீரென அவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Post A Comment: