Propellerads
Navigation

20 வருடங்கள் கழித்து உருவாகும் 2ஆம் பாகம்



கடந்த 1997ஆம் ஆண்டு ப்ரவீண்காந்த் இயக்கத்தில் நாகார்ஜூனா, சுஷ்மிதாசென் நடிப்பில் வெளியான 'ரட்சகன்' சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது 20 வருடங்கள் கழித்து இந்த படத்தின் 2ஆம் பாகம் தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'தோழா' வெற்றியை அடுத்து 'ரட்சகன் 2' படத்தில் நடிக்க நாகார்ஜூனா சம்மதித்துள்ளதாகவும், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகவுள்ள இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இயக்குனர் உள்பட மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது.
Share
Banner

Post A Comment: