Propellerads
Navigation

அஜித், விஜய் திருமணம் குறித்து த்ரிஷா

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் முன்னணி நாயகியாக விளங்கி வரும் நடிகை த்ரிஷா இப்போதும் இளையதலைமுறை நடிகைகளுக்கு இணையாக பிசியாக நடித்து வருகிறார். அரவிந்தசாமியுடன் 'சதுரங்க வேட்டை 2' படம், விஜய்சேதுபதியுடன் ஒரு படம் உள்பட பல படங்களில் நடித்து வரும் த்ரிஷா, சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அஜித்-ஷாலினி ஜோடிப் பொருத்தம் குறித்து பதிலளித்த த்ரிஷா இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமான மிகச்சரியான ஜோடி என்றார்.

விஜய் படங்களில் மிகவும் பிடித்த படம் என்ற கேள்விக்கு 'கில்லி' என்று பதிலளித்த த்ரிஷா விஜய் தொழில்பக்தியுடன் தாராளமான மற்றும் கருணை உள்ளம் கொண்டவர் என்று கூறினார்.

மேலும் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளில் தனக்கு பிடிக்காத கேள்வி 'உங்களுக்கு எப்போது திருமணம்' என்ற கேள்விதான் என்று கூறினார்.

மேலும் சிவகார்த்திகேயனின் லேடி கெட்டப் குறித்து கூறியபோது, 'அவரது பெரும் முயற்சி ஆச்சரியத்தக்கது' என்று கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: