விலங்குகள் நல அமைப்பான, பீட்டாவுக்காக, எமி ஜாக்சன் நடித்த, பிரசார படத்திற்கு, தமிழக ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எமி ஜாக்சன், பீட்டாவுக்கு ஆதரவாக, ஜல்லிக்கட்டு எதிர்ப்பு பிரசாரம் செய்தார். இது, ஜல்லிக்கட்டை ஆதரிக்கும், தமிழக ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.
அதனால், ரஜினியுடன், எமி நடிக்கும், 2.0 படத்தில் இருந்து, அவரை நீக்க வேண்டும் என, பலர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பீட்டாவுக்காக, தான் நடித்த பிரசார படத்தின் முதல் பாகம், விரைவில் வெளியாக உள்ளதாக, எமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, எமிக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. முதலில், நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்; எங்களுக்கு, பீட்டா தேவையில்லை என, அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
எமியின் பீட்டா பிரசார படம், ரஜினி படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: