Propellerads
Navigation

காஷ்மோரா விழாவை புறக்கணித்த நயன்தாரா

நடிகர் கார்த்தி, நடிகையர் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம், காஷ்மோரா. தீபாவளிக்கு வெளியாகும், இப்படத்தின் இசை, முன்னோட்டம், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

விழாவில், கார்த்தி, ஸ்ரீதிவ்யா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் கோகுல் உட்பட, பலர் பங்கேற்றனர். ஆனால், படத்தின் நாயகி நயன்தாரா பங்கேற்கவில்லை.

விழாவில், நடிகர் கார்த்தி பேசியதாவது: காஷ்மோரா கதாபாத்திரம், இயக்குனர் கோகுலின் கடும் உழைப்பால் உருவானது. பாகுபலி படத்தை பார்த்த போது, நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லையே என, வருத்தப்பட்டது உண்டு. இப்படம் ஜாலியான படம்; நடிகர் விவேக், முதன்முறையாக, என் அப்பாவாக நடித்துள்ளார். பையா படத்தில், நான் நயன்தாராவுடன் நடிக்க வேண்டியது. ஆனால், அதற்கான வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது. இப்படத்தில், காதல் கிடையாது; குடும்பங்கள் கொண்டாடும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
Banner

Post A Comment: