Propellerads
Navigation

சென்னை விமான நிலையத்தில் முகமூடியுடன் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்து விஜய், கீர்த்திசுரேஷ் உள்பட படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.

தீபாவளி திருநாளின்போது கூட படப்பிடிப்பில் இருந்த விஜய் நேற்று சென்னை திரும்பியதாகவும், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களின் அன்புத்தொல்லையில் இருந்து விடுபட அவர் முகத்தில் மூடும் வகையில் மாஸ்க் போன்ற துணியை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் 'பைரவா' படத்திற்காக இன்னும் மூன்று அல்லது நான்கு காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே பெண்டிங் இருப்பதாகவும் நவம்பர் 10 அல்லது 15க்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்றும் இயக்குனர் பரதன் தெரிவித்துள்ளார்.

வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: