Propellerads
Navigation

அதிதி படத்தில் லிசாவுக்கு பதில் க்ருத்தி

அதிதி தும் கப் ஜாயோக் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க அப்படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

இந்த படத்திற்கு அதிதி இன் லண்டன் என பெயரிடப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்திக் ஆர்யன் மற்றும் நடிகை லிசா ைஹடனிடம் படக்குழுவினர் பேசி உள்ளனர்.

தற்போது இப்படத்தில் லிசா நடிக்கவில்லையாம். லிசாவின் நிச்சயதார்த்தம் காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம். தற்போதைய நிலவரப்படி, அதிதி இன் லண்டன் படத்தில் நடிக்க க்ருத்தி கர்பந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

க்ருத்தி இதற்கு முன் ராஸ் ரோபட் படத்தில் நடித்துள்ளார். அபிேஷக் பதாக் தயாரிக்கும் அதிதி இன் லண்டன் படத்தை அஸ்வினி திர் இயக்க உள்ளார்.
Share
Banner

Post A Comment: