Propellerads
Navigation

ஹிருத்திக்கிற்கு சொந்த காலில் நிற்க தெரியாதா? : கங்கனா

ஹிருத்திக் ரோஷனுக்கும், கங்கனா ரனாவத்திற்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. சமீபத்தில் தயாரிப்பாளரும் ஹிருத்திக்கின் தந்தையுமான ராகேஷ் ரோஷன், செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஹிருத்திக் - கங்கனா இடையேயான சர்ச்சைகள் குறித்து பேசினார்.

அப்போது அவர், என் மகன் வாயை திறந்திருந்தால் உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கும் என்றார். ராகேஷ் ரோஷனின் இந்த வார்த்தைகள் கங்கனாவை சீண்டி பார்த்துள்ளது. புத்தக வெளியீட்டு ஒன்றில் கலந்து கொண்ட கங்கனாவிடம் இது பற்றி கேட்கப்பட்டது.

அப்போது அவர், ஹிருத்திக் ரோஷனுக்கு 43 வயதாகிறது. ஏன் அவர் இன்னும் சொந்தகாலில் நிற்க தெரியவில்லை. ஒவ்வொரு சின்ன சர்ச்சைகளுக்கும் அவரது தந்தை ஹிருத்திக்கை ஏன் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். இது ஹிருத்திக்-, கங்கனா இடையே புதிய சர்ச்சையை துவக்கி வைத்துள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share
Banner

Post A Comment: