கடந்த ஆண்டு நான்கு வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவி இந்த ஆண்டு அவர் நடித்த 'மிருதன்' படம் மட்டுமே வெளிவந்துள்ளது. இந்நிலையில் அவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'போகன்' திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில் வரும் டிசம்பரில் இந்த படம் வெளியாகும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த படத்தின் டீசரும் தயாராகி வருவதாகவும், மிக விரைவில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா, அக்ஷரா கெளடா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தி 'ரோமியோ ஜூலியட்' பட இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ளார். பிரபுதேவாவின் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: