கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற படமும் ஒன்று. மம்முட்டி, நயன்தாரா இந்த படத்தில் தம்பதிகளாக நடித்திருந்தனர். இருவரின் மெச்சூரிட்டியான நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த படம் தமிழில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதில் மம்முட்டி வேடத்தில் அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஹீரோயினியாக மீண்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே 'தனி ஒருவன்' படத்தில் இருவரும் நடித்திருந்தாலும், இந்த படத்தில்தான் முதன்முதலாக ஜோடியாக நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: