லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தொடர்ந்து வெற்றி படங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் அதர்வா நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகரும், ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் 'அகிரா' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்த அனுராக் காஷ்யப் அவர்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்., இந்த படத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் பெரும் உதவியாக இருந்ததாகவும், இதற்காக 'இமைக்கா நொடிகள்' படக்குழுவினர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
டிமாண்டி காலனி' அஜய்ஞானமுத்து இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளார். கேமியோ பிலிம்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: