கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளி தினத்தில் வெளிவரவுள்ள 'காஷ்மோரா' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான டீசரில் வரும் ஒருசில காட்சிகள் 'பாகுபலி'க்கு இணணயாக இருப்பதால் எதிர்பார்ப்பு இரு மடங்காகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வடஅமெரிக்க ரிலீஸ் உரிமையை சினிகேலக்ஸி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை இந்நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் இதே நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' படத்தை அமெரிக்காவில் ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: