Propellerads
Navigation

பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவு: சல்மான் கானின் கொடும்பாவி எரிப்பு

பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேசத்தில் அவரது கொடும்பாவையை எரித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல.  அவர்களை தீவிரவாதிகளைப்போல கருதக்கூடாது. கலையையும், தீவிரவாதத்தையும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து பார்க்க கூடாது என்று இந்தி நடிகர் சல்மான் கான் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவ முகாமில் கடந்த மாதம் 18-ம் தேதியன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 19 இந்திய வீரர்கள் பலியானார்கள். அந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம்  கடந்த  பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவி 7 தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்த அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

எல்லையை கடந்து சென்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியது தொடர்பாக அறிவிப்பு வெளியான நிலையில், பாகிஸ்தான் நடிகர்களை இந்தி பட உலகில் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இந்தியப்படத் துறையில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானம் வெளியான நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இதுதொடர்பாக தனது கருத்தை தெரிவித்தார்.

பாகிஸ்தானை சேர்ந்த கலைஞர்களை தீவிரவாதிகளை போல கருதக்கூடாது. அவர்கள் தீவிரவாதிகள் அல்ல. தீவிரவாதத்தையும், கலையையும் தொடர்புப்படுத்தி பார்க்க கூடாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சல்மான் கானின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க. தொண்டர்கள் உள்ளூர் எம்.எல்.ஏ. சங்கீத் சோம் சேனா தலைமையில் இன்று சல்மான் கானின் கொடும்பாவையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சல்மான் கானின் திரைப்படங்களை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Share
Banner

Post A Comment: