Propellerads
Navigation

அஜித் சர்ச்சை குறித்த கருத்துக்கு சிம்பு விளக்கம்

சிம்புவுக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதுமே தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இவற்றில் பெரும்பாலான சர்ச்சைகள் அவர் மனதில் நினைத்து ஒரு விஷயத்தை கூறியிருப்பார். ஆனால் அவர் சொன்னதை பலர் தவறாக புரிந்து கொண்டு சர்ச்சையை ஆக்கிவிடுவதாகத்தான் இருக்கும்.

அந்த வகையில் தற்போதும் ஒரு சர்ச்சை கிளம்பியது. நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சிம்பு, 'அஜித் ப்ளாப் படங்கள் கொடுத்தபோதும் கூட அவரை நான் தல தல என தூக்கி வைத்து கொண்டாடியுள்ளேன். ஆனால் பலர் அவர் வெற்றி படங்கள் கொடுத்து வரும் நேரத்தில் மட்டும் அவர் பெயரை பயன்படுத்தி வருகின்றனர்' என்று கூறினார்

இந்த கருத்தை ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டு சமூக ஊடகங்களில் சிம்புவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்புவின் டுவிட்டரில் இதற்கு விளக்கம் அளிக்கபப்ட்டுள்ளது. எனக்கும் தல அஜித்துக்கும் உள்ள நல்ல உறவை பிரிக்க முயற்சி செய்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். உண்மையான தல ரசிகர்கள் என்னை சரியாக புரிந்து கொள்வார்கள். அவரை நான் என்றுமே தவறாக பேச மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

சிம்புவின் இந்த விளக்கத்திற்கு பின்னராவது சமூகவலைத்தளங்களில் இந்த பிரச்சனை முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Share
Banner

Post A Comment: