தல அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தில் அஜீத் இண்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார் என்றும் தமிழகத்தில் நடைபெறும் ஒரு குற்றத்தின் பின்னணியை கண்டுபிடிக்க அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதாகவும்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்.
ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி அஜித் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும், இரண்டாவது வேடம் அஜித் ரசிகர்கள் உள்பட அனைவரும் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் நாயகியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்சராஹாசனும் நடித்து வருகின்றனர்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: