Propellerads
Navigation

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிப்பேன்:ஸ்ரீதிவ்யா

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்  பெற்றது. இப்படத்தின் வெற்றியால் மீண்டும் இருவரும் இணைந்து 'காக்கிசட்டை' படத்தில்  நடித்தனர்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் நடித்தார்கள். அடுத்து நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு ஸ்ரீதிவ்யா பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “ஒரு படத்துக்கான கதையை தயார் செய்யும் போதே அந்த படத்தில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்பதை இயக்குனர்கள் முடிவு செய்து விடுகிறார்கள். எனவே, நான் நடிக்கும் வகையில் பொருத்தமான கதை அமையும் போது, நிச்சயம் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிப்பேன்.

தற்போது ‘காஷ்மோரா’ படத்தில் நடித்து இருக்கிறேன். ‘மாவீரன் கிட்டு’வில் நடித்து வருகிறேன். நிச்சயம் இந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறும். இதற்குப் பிறகு பிரபல நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும்” என்றார்.
Share
Banner

Post A Comment: