இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உண்டாக்கியுள்ளது.
மேலும் இந்த படத்திற்காக இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற வேண்டியதுள்ளதாகவும், அதில் ஒரு பாடலுக்கான பிரமாண்டமான செட் பின்னி மில்லில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் திருவிழா ஒன்றில் நடைபெறும் பாடல் காட்சி என்பதால் கலை இயக்குனர் இந்த பாடலுக்குரிய செட்-ஐ திருவிழா நடைபெறும் இடமாகவே மாற்றியுள்ளாராம். இந்த பாடலின் படப்பிடிப்பு இன்று முதல் நடைபெறவுள்ளது.
வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...

Post A Comment: