Propellerads
Navigation

'எஸ் 3' மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடித்து வந்த சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான 'எஸ் 3' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

டீசர் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் மோஷன் போஸ்டர் தீபாவளி தினத்தில் இணையதளங்களிலும், திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் சமூக வலைத்தளத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளியானதில் இருந்து சூர்யாவின் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே விஜய்யின் திருவிழா பாடல் தீபாவளி தினத்தில் அதிகாலை 12 மணிக்கு வெளிவரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில் இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கான சிறப்பு விருந்தாக கருதப்படுகிறது.

டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர்,  ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு  பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்
Share
Banner

Post A Comment: