ஜாக்கிசான் நடித்த 'ஸ்கிப் டிராஷ்' என்ற திரைப்படம் ஏற்கனவே சீனாவில் ரிலீஸ் ஆகி கோடிக்கணக்கான டாலர்களை அள்ளிய நிலையில் இன்று இந்த படம் தமிழில் 'இரு கில்லாடிகள்' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. ஜாக்கிசான் நடித்த படம் தமிழில் ரிலீஸ் ஆகும் இன்று அவருக்கு ஒரு மிக மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அதுதான் ஜாக்கிசானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ள செய்தி
திரையுலகில் பல சாதனைகள் படைத்துள்ள ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பை ”THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE” என்ற அமைப்பு அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஜாக்கிசானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என தெரிகிறது
62 வயதாகும் ஜாக்கிசான் இதுவரை 30 திரைப்படங்களை இயக்கியும் ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார். காமெடியுடன் கூடிய ஆக்சன் படம்தான் இவரது பாணி. சீனாவில் முன்னணி நடிகரான இவர் ஹாலிவுட்டிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர் ரஷ் ஹவர், கராத்தே கிட் போன்ற ஹாலிவுட் படங்கள் ஜாக்கிசானுக்கு பெரும் புகழை தேடித்தந்தது.
மேலும் ஜாக்கிசான், நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மிகப்பெரிய விசிறி என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான 'கபாலி' படத்தை அவர் சீனாவில் முதல் நாளில் பார்த்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: