Propellerads
Navigation

விஜய்-அட்லி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்குவார் என்றும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அட்லிக்கு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளதோடு வரும் ஆண்டு அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் ஆண்டாக இருக்கும் என்று வாழ்த்தியுள்ளது.

முறையான அறிவிப்புக்கு பின்னர் விஜய் 61' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்றும் இந்த படம் 2017ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளீயாகும் என்றும் கூறப்படுகிறது. விஜய்-அட்லி கூட்டணியில் உருவான 'தெறி' உலக அளவில் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: