Propellerads
Navigation

ஐஸ்வர்யாவை அடுத்து செளந்தர்யாவை தேடி வந்த முக்கிய பதவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் ஐ.நா.வில் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருடைய இரண்டாவது மகள் ஐஸ்வர்யா இந்திய விலங்குகள் நல வாரியத்தின் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான முறையான அறிவிப்பை  விலங்குகள் நல வாரிய தலைவர் டாக்டர் எஸ்.சின்னி கிருஷ்ணா இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இதுகுறித்து செளந்தர்யாவிடம், விலங்குகள் நல வாரியம் பேசி சம்மதம் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரஜினியின் இரண்டு மகள்களும் திரைத்துறையில் ஜொலிப்பது மட்டுமின்றி இரண்டு பெரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் ரஜினியின் குடும்பத்தினர் பெருமை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: