Propellerads
Navigation

'இருமுகன்' திரை முன்னோட்டம்

முதன்முதலாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் சீயான் விக்ரம், முதன்முதலாக விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, 'அரிமா நம்பி' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் சங்கரின் இரண்டாவது படம் ஆகிய பெருமைகள் கொண்ட 'இருமுகன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

மெடிக்கல் க்ரைம் படமான இந்த படத்தில் விக்ரம் முதன்முதலாக அகிலன் மற்றும் லவ் ஆகிய இரண்டு முற்றிலும் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். வில்லன் கேரக்டரான லவ், கேரக்டருக்காக விக்ரம் அதிகபட்ச உழைப்பை கொட்டியிருக்கின்றார் என்பது டிரைலர் மூலமே தெரிய வருகிறது. 'ஐ' படத்திற்கு பின்னர் விக்ரமின் 'லவ்' கேரக்டர் பெரிதும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் ஆக்சன் கலந்த ரொமாண்டிக் கேரக்டரில் நடித்துள்ளார். முதன்முதலாக இந்த ஜோடி இணைந்திருப்பதால் படம் வெளிவந்த பின்னர்தான் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி குறித்து தெரிய வரும். 'ஓகே கண்மணி' நித்யாமேனனுக்கு இந்த படம் பெரும் திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது இந்த படத்திற்கு கிடைத்த மேலும் ஒரு பலம். குறிப்பாக மதன்கார்க்கி எழுதிய 'ஹெலேனா' பாடல் அனைத்து எப்.எம் வானொலிகளிலும் தொடர்ந்து ஒலித்து கொண்டே உள்ளது.

ஆனந்த் சங்கரின் 'அரிமா நம்பி'யின் விறுவிறுப்பான திரைக்கதை அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த நிலையில் இந்த படத்திலும் அவர் நிச்சயம் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியிருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இந்த படத்தின் டிக்கெட்டுக்கள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்யப்பட்டதில் இருந்தே இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் ரசிகர்களின் மனதை கவர்ந்ததா என்பதை நாளைய விமர்சனத்தில் பார்ப்போம்.
Share
Banner

Post A Comment: