Propellerads
Navigation

இளையதளபதி ரசிகர்களுக்கு ஒரு இனிக்கும் செய்தி

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது தெரிந்ததே. இருந்தும் இதுவரை இந்த படத்தின் டைட்டில் இறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்த படத்தின் டைட்டில் குறித்து இணையதளங்களில் பல்வேறு செய்திகள் வருவதும் அதை படக்குழுவினர் மறுப்பதுமாக இருந்த நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் இறுதி செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வந்துள்ளது.

ஆம், 'விஜய் 60' படத்திற்கான டைட்டில் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அனேகமாக இந்த டைட்டில் விநாயகர் சதூர்த்தி தினத்தில் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது.

விஜய்-பரதன் இணைந்த முந்தைய படமான 'அழகிய தமிழ்மகன்' போன்றே இந்த படத்தின் டைட்டிலும் ஒரு நல்ல அழகான தமிழ் டைட்டில் என்று கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: