தனி ஒருவன்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அரவிந்தசாமி தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'போகன்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தில் அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது, 'சதுரங்க வேட்டை 2' படத்தில் அரவிந்தசாமியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். விரைவில் அவரது கால்ஷீட் குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒப்பந்தம் செய்யப்படும்' என்று கூறினர். மேலும் இந்த படத்தின் நாயகி தேர்வும் இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும் என்றும் கூறினர்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: