Propellerads
Navigation

சூர்யாவின் வில்லனாக மாறிய நிஜ பைலட்


சூர்யாவின் சகோதரர் கார்த்தி, மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தில் பைலட்டாக நடித்து வரும் நிலையில், சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' படத்தில் நிஜ பைலட் ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் பெயர் தாகூர் அனுப்சிங் என்பதாகும்

ராமாயணம், மகாபாரதம் உள்பட பல இதிகாச தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய வேடங்களை ஏற்று நடித்த தாகூர், ஒருசில பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்துவரும் 'எஸ் 3' படத்தின் அவர் மெயின் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் நடைபெறவுள்ள சென்னை மற்றும் வெளிநாட்டு படப்பிடிப்புகளில் தாகூர் அனுப்சிங் கலந்து கொள்வார் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர்,  ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
Share
Banner

Post A Comment: