Propellerads
Navigation

கமல்-ரஜினி-அஜித்-விஜய் உண்டா?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வரப்படும் நிலையில் நடிகர் சங்கத்திற்கு என புதிய கட்டிடம் கட்டும் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக நட்சத்திர கிரிக்கெட், விஷால்-கார்த்தி திரைப்படம் உள்பட பல்வேறு வழிகளில் நிதிதிரட்டி வரும் நிலையில் விரைவில் 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை நாடகமாக்க உள்ளனர். இந்த நாடகத்தில் கமல், ரஜினி, அஜித் விஜய் நடிப்பார்களா? என்ற கேள்விக்கு நடிகர் சங்க செயலாளர் விஷால் பதிலளித்துள்ளார். அந்த பதில் இதோ:

'பொன்னியின் செல்வன் நாடகத்தில் கமல் சார் நிச்சயமா இருப்பார். நானே அதை உறுதியா சொல்வேன். அவர் எங்களுக்கு ஒரு தூண் மாதிரி பக்கபலமா இருக்கர். நாங்க ஜெயிச்சதும் ரஜினி சார் போன் பண்ணி வாழ்த்தினார். சி.சி.எல் கிரிக்கெட் மேட்சுக்கு கூப்பிட்டதும் வந்தார். ஆனா, இந்த நாடகத்துல அவர் இருப்பாரானு தெரியலை. விஜய்கிட்ட ஸ்டார் கிரிக்கெட் ஃபங்க்ஷனுக்குக் கூப்பிடுறதுக்கக கேட்டேன். 'விருப்பம் இல்லை'னு சொன்னார். அஜித் வாய்ப்பே இல்லை. நாங்க கேட்கவும் மாட்டோம். ஆனா, ஒவ்வொருவரின் முடிவை நாம் மதிச்சே ஆகணும். சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. அவங்களுக்கு பிடிக்கலைங்கிறதால நாம குறை சொல்ல முடியாது. அது அவர்களின் உரிமை.
Share
Banner

Post A Comment: