Propellerads
Navigation

சமந்தாவுக்கு என்ன கேரக்டர்?

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வெற்றி படங்களுக்கு பின்னர் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி இணையவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகியாக சமந்தா நடிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக சமந்தா நடிக்கவுள்ள இந்த படத்தில் அவருடைய கேரக்டர் என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

சமந்தாவின் கேரக்டர் குறித்து இயக்குனர் பொன்ராம் கூறுகையில், 'சமந்தா இந்த படத்தில் பக்கத்துவீட்டு பெண் போன்ற இயல்பான கேரக்டரில் நடிக்கவுள்ளார். மேலும் எனது முந்தைய படங்களின் நாயகிகள் போன்ற லுக்கில் அவர் இருந்தாலும் இந்த படத்தில் அவர் சிட்டி பெண்ணாக நடிக்கவுள்ளார். அவருடைய புதிய, வித்தியாசமான அவதாரத்தை ரசிகர்கள் இந்த படத்தில் ரசிக்கலாம்' என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2017, ஜனவரியில் தொடங்கும் என்றும் இந்த படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: