Propellerads
Navigation

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சமந்தா

கோலிவுட் திரையுலகில் அழுத்தமாகவும் ஆழமாகவும் காலூன்றியுள்ள சிவகார்த்திகேயன் இன்னும் ஒருசில வருடங்களில் இளையதலைமுறை நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முதலில் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒருசில முன்னணி நடிகைகள் தயங்கியதுண்டு. ஆனால் அவருடைய வளர்ச்சியை பார்த்து தற்போது ஹன்சிகா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளே ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி இடத்தை பிடித்துள்ள சமந்தா. ஆம், சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கவுள்ள படத்தின் நாயகியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏம் ஸ்டுடியோஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.

சிவகார்த்திகேயனின் 'ரெமோ' அக்டோபரில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை அடுத்து அவர் மோகன்ராஜா படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: