Propellerads
Navigation

'கொடி' ரிலீஸ் தேதி. தனுஷின் அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் தற்
போது 'தொடரி' மற்றும் 'கொடி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இந்நிலையில் தனுஷ் இன்று தனது சமூக வலைத்தளத்தில் 'கொடி' ரிலீஸ் குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார்.

'கொடி' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தீபாவளி திருநாளில் கார்த்தியின் 'காஷ்மோரா', விஷாலின் 'கத்திச்சண்டை' ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் தற்போது தனுஷின் 'கொடி'யும் தீபாவளி ரேசில் இணைந்துள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அரசியல் த்ரில்லர் படமான 'கொடி' படத்தில் தனுஷ் முதன்முதலாக இரண்டு வேடங்கள் ஏற்றுள்ளார். தந்தை, மகன் வேடங்களில் தனுஷ் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில்  த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'எதிர்நீச்சல், 'காக்கி சட்டை' பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ப்ரவீன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
Share
Banner

Post A Comment: