Propellerads
Navigation

அஜித்துக்கு கிடைத்த ஹாலிவுட் பட்டம்

அஜித்துக்கு பட்டம், பதவி, அடைமொழி ஆகியவற்றில் விருப்பம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அல்டிமேட் ஸ்டார் என்ற அடைமொழியை கூட அவர் கடந்த சில வருடங்களாக பயன்படுத்துவதில்லை. ஆனால் அவர் விரும்பாவிடினும் அவரை தேடி பட்டங்கள் வந்து கொண்டேதான் உள்ளது. தற்போது லேட்டஸ்டாக அவருக்கு கிடைத்திருக்கும் பட்டம் 'இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்' என்பதுதான்

ஹாலிவுட்டில் சில்வர்ஸ்டர் ஸ்டாலோனுக்கு இருக்கும் பெயர், புகழ், மதிப்பு, மரியாதை அனைவரும் அறிந்ததுதான். அவருக்கு இணையாக இந்தியாவில் புகழ் பெற்றிருக்கும் அஜித்துக்கு ஆஸ்திரியா நாட்டின் ஊடகம் ஒன்று 'இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்' என்ற அடைமொழியை கொடுத்து கெளரவித்துள்ளது.

அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியா நாட்டின் Carinthia என்ற பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டின் ஊடகம் ஒன்றுதான் இந்த படத்தின் செய்தியை வெளியிட்டதோடு, இந்த அடைமொழியையும் அவருக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் நாடு திரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: