Propellerads
Navigation

செப்டம்பரில் கீர்த்திசுரேஷ் வீட்டில் டும்டும் மேளம்

கோலிவுட் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இணைந்துவிட்ட நடிகை கீர்த்திசுரேஷ், சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ' படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது 'விஜய் 60' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் சூர்யாவின் அடுத்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கீர்த்திசுரேஷ் வீடு தற்போது கல்யாண களையுடன் உள்ளது. கீர்த்திசுரேஷின் உடன்பிறந்த சகோதரி ரேவதி சுரேஷுக்குத்தான் திருமணம்,. வரும் செப்டம்பர் 8ஆம் தேதி குருவாயூர் கோவிலில் திருமணம், என்றும், செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கீர்த்திசுரேஷின் சகோதரி ரேவதி சுரேஷூம் திரையுலகில் பணிபுரிபவர்தான். அவர் விஷுவல் எஃபெக்ட் கலைஞராக பல படங்களில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: