Propellerads
Navigation

நயன்தாரா எனக்கு பொருத்தமான ஜோடி: ஜீவா


ஜீவா, நயன்தாரா நடித்த 'திருநாள்' சமீபத்தில் வெளிவந்தது. இதன் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சியில் ஜீவா, நயன்தாராதான் எனக்கு பொருத்தமான ஜோடி என்ற ரசிகர்கள் சொல்கிறார்கள் என்றார். அவர் மேலும் பேசியதாவது:

திருநாள் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என் வாழ்க்கையில் முக்கியமான படம். யான் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது ராம்நாத் இந்தக் கதையை என்னிடம் கூறினார். இது உங்களுக்காக தைக்கப்பட்ட சட்டை போல டெய்லர் மேட் படமாக இருக்கும் என்றார். முதல் பாதி கதையைக் கேட்டவுடனேயே பிடித்துவிட்டது. என் ஒவ்வொரு படத்தையும் நன்றாக வரவேண்டும் என்று நினைத்துதான் செய்கிறேன். உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைத்துதான் செய்கிறோம். இந்தப் படத்திலும் அப்படித்தான் நினைத்து நடித்தேன். நல்ல படக்குழுவுக்கு எல்லாம் தானாக அமையும் என்பேன். அப்படி அமைந்த படம் இது.

படம் பார்த்துவிட்டு கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூரிலிருந்து எல்லாம் நிறையபேர் போன் செய்தார்கள். எல்லாருக்கும் இதில் என் தோற்றம் பிடித்தது. இப்படி ஊர்ப்பகுதி மக்களுக்குப் பிடித்த படமாகவும் அமைந்தது மகிழ்ச்சி. நயன்தாராவுடன் நடித்தது எல்லாருக்கும் பிடித்து இருந்தது. பொருத்தமான ஜோடி என்கிறார்கள். அடுத்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த வெற்றி எதிர்காலத்தில் தரமான நல்ல படங்கள் தரவேண்டிய ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது என்றார் ஜீவா.
Share
Banner

Post A Comment: