Propellerads
Navigation

அமீர்கான் ஜோடியாக தீபிகா?


ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் தக் என்ற படம் உருவாக இருந்தது. ஆனால் ஹிருத்திக் இப்படத்தில் நடிக்க மறுக்க, இப்போது அவருக்கு பதிலாக அமீர்கான் நடிக்க இருக்கிறார். படத்தில் அமீர்கான் ஜோடியாக தீபிகா படுகோனையை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. 1860-களில் வெளிவந்த தக் என்ற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளது. அமீர்கான், திருடனாகவும், அவரது காதலியாக தீபிகாவும் நடிக்க உள்ளார்கள். இதுவரை அமீர்கானும், தீபிகாவும் இணைந்து நடித்தது இல்லை. அதனால் இவர்கள் இருவரையும் நடிக்க வைக்க இயக்குநர் விஜய் கிருஷ்ணாவும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். நிச்சயம் தீபிகா நல்ல முடிவை சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: