ரஜினி டுவிட்டர் பக்கம் திடீர் முடக்கம்
சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டாத ரஜினி, 2013ல், டுவிட்டர் கணக்கை ஆரம்பித்தார். அவரது ரசிகர்கள், ஒரே நாளில், 10 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். இதுவரை, 3 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
பிரதமர் மோடி, ஏ.ஆர்.ரகுமான், அமிதாப், மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் என, 23 பேரை மட்டுமே, ரஜினி பின்தொடர்கிறார். டுவிட்டர் கணக்கு ஆரம்பித்த, மூன்று ஆண்டுகளில் ரஜினி, 29 முறை மட்டுமே பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், வெளியான, கபாலி படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படத்தின் தாக்கம் சற்று ஓய்ந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, ரஜினியின் டுவிட்டர் பக்கத்தை சிலர் முடக்கினர். உடனடியாக, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா நடவடிக்கை மேற்கொண்டு, மர்ம நபர்கள் பிடியிலிருந்து, ரஜினியின் கணக்கை மீட்டுள்ளார்.
இதுகுறித்து, டுவிட்டரில் ஐஸ்வர்யா கூறுகையில், அப்பா வின் கணக்கை யாரோ முடக்கி விட்டனர்; உடனடியாக, மீட்டு விட்டோம். ஆல் இஸ் வெல் என, தெரிவித்துள்ளார்.


Post A Comment: